சிவகங்கை மாவட்டம், சிவ கங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் நேற்று (மே 30) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில், கருங்காப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழி கள் வெட்டுதல் பணி, கொளக்கட் டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பப் பணி, காருக்கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி மற்றும் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில், வையாபுரி கண்மாயில் வரத்து வாய்கால் சீரமைப்புப் பணி மற்றும் ஒக்கூர் ஊராட்சிப் பகுதியில், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில், குண்டச்சியேந்தல் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, கரையாகுடி கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி மற்றும் கீழப்பழங்குடி பகுதியில் தலா ரூ.12.55 லட்சம் மதிப்பீட்டில் சிலம்பாண்டி கண்மாயில் பாசன வாய்க்கால் வெட்டுதல் பணி, வீரன் ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்லமுத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஒக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும்,இவ்வூராட்சிப் பகுதியில் ரூ.4.53 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமின் கட்டுமான நிறைவுப் பணிகளின் நிலை குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.
ஒக்கூர் ஊராட்சி
ஒக்கூர் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் கீழப்பூங்குடியிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மருந்துகளின் இருப்பு, தேவையான மருத்துவ உபகரணங்கள், உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, ஆய்வ கப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்து, கீழப்பூங்குடி மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார பொது மருத்துவமனைக்கான இடத்தி னையும் பார்வையிட்டார்.
ஒக்கூர் ஊராட்சியிலுள்ள என்.என்.571-க்கு உட்பட்ட மூன்று நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்தார். குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல் பாடுகள் ஆகியன குறித்து, ஆய்வு செய்தார்.
குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல் பாடுகள் தொடர்பாக கேட்ட றிந்தார். ஒக்கூர் ஊராட்சியிலுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த உறுப்பினர்களிடம், கலந்துரையாடி அவர்களின் மேம்பாட்டு வசதிக்கென அர சால் வழங்கப்பட்டு வரும் பல் வேறு கடனுதவிகள் குறித்து எடுத் துரைத்தார்.
ஒக்கூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை குறித்தும், மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.5.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆட்சியர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து, பயன்பாட் டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மண்டல இணைப்பதி வாளர் கோ.ஜீனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறி யாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாச கம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மனாதன், ஜெகநாதசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.