fbpx
Homeபிற செய்திகள்சிறுமுகை பகுதி விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

சிறுமுகை பகுதி விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பழத்தோட்டம் காந்தி வீதியைச்சேர்ந்தவர் நாகராஜன்(50). இவர் நேற்று மாலை அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளுக்கு தேவையான தீவனம் அறுக்கச்சென்றுள்ளார்.

அப்போது ,புற்களின் நடுவே மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக்கண்டு அப்பகுதியைச்சேர்ந்த பாம்பு பிடி வீரர் காஜா மொய்தீன்(45) என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து சென்ற அவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார்.
பின்னர்,சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமார் உத்தரவின் பேரில் அதனை அடர் வனப்பகுதியில் விடுவித்தார்.

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img