fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் தமிழ் மன்றத்தின் சிறப்பு பட்டிமன்றம்

சிமாட்ஸ் தமிழ் மன்றத்தின் சிறப்பு பட்டிமன்றம்

சிமாட்ஸ் இன்ஜினியரிங் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிமாட்ஸ் தமிழ் மன்றம் மெகா தொலைகாட்சியுடன் இணைந்து சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியது.

வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைய – பெற்றதை விரும்ப வேண்டுமா? விரும்பியதைப் பெற வேண்டுமா? என்ற தலைப்பில் டாக்டர் நெல்லை பி. சுப்பையா ஆளுகையில் பேச்சாளர்களாக வீ ராமமூர்த்தி, செ.லஷ்மி கணபதி, ந. திவ்யா பிரபா, முனைவர் ஏ. கோதண்டராமன், க. பா. ராஜலஷ்மிபிரபாகரன், எபினேசர் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக நடிகர் பாண்டியராஜின் மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்றனர். சிமாட்ஸ் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரேவதி, சிமாட்ஸ் தமிழ் மன்ற மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் மருத்துவர் ந.மா. வீரையன், சிமாட்ஸ் என்ஜினீயரிங் இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் அவர்களின் அதீத தமிழ் இலக்கிய ஆர்வமும் வழிகாட்டுதலுமே இத்தகைய சிறப்பான பட்டிமன்றங்கள் தொடர்ந்து நடைபெறக் காரணமாகும்.

படிக்க வேண்டும்

spot_img