தென்னிந்தியாவின் பிரமாண் டமான, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், கோவையில் ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தைத் துவக்கியது.
110 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி திட்டமாகும் இது. ஏற்கனவே 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஜி ஸ்கொயர் திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதலாவது புதுமைத்திட்டமான ஜி ஸ்கொயர் 2.0, 1668 வீட்டுமனைகள் மற்றும் 8 வணிக மனைகளுடன், சர்வதேச தரத்திலான 90 நவீன வசதிகளுடன் அமைகிறது. ஆடம்பரமான கிளப் ஹவுஸ்கள் மற்றும் ஹெலிபேடு வசதி கொண்டது.
ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 திட்டத்தைத் துவக்கி வைத்து, ஜி ஸ்கொயர் ரிலேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால ராமஜெயம் கூறியதாவது:
புதிய திட்டத்தில், இப்போது 90-க்கும் அதிகமான, சர்வதேச தரத்திலான நவீன வசதிகளுடன், இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளேயே டிரைவ் – இன் தியேட்டரும் உருவாக்கப்படுகிறது.
முந்தைய ஜி ஸ்கொயர் திட்டத்தில் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள் புதிய ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 வில் பயன் பெறலாம். இங்கு மனைகள் வாங்குவதிலும், முதலீட்டிலும் பெறப்படும் எதிர்கால லாபகரத்தைச் சொல்ல
வேண்டியதே இல்லை.
எதிர் காலத்தில் இங்கு நிலமதிப்பு விண்ணைத் தொடும்.
ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 வில் 1688 வீட்டுமனைகள் அமையும். 3 சென்ட் – ரூ.27 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. முந்துவோருக்கு விலை சென்ட்க்கு ரூ.8.95 லட் சமாகும் என்றார்.



