fbpx
Homeபிற செய்திகள்தேசிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு- 64-வது இடத்தில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி

தேசிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு- 64-வது இடத்தில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி

இந்தியாவில் உள்ள கல்லூரிகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் என்ஐஆர்எப் என்னும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு வழங்கிய இந்தாண்டுக்கான தரவரிசையைப் பட்டியலில், சிமாட்ஸ் பல்கலைக்க ழகத்தின் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி 64-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற நிலையில் இக்கல் லூரிக்கு 64-வது இடம் கிடைத்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் சிமாட்ஸ் பல்கலைக்கழகம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.

இப்பல்கலை. மாணவர்களிடையே திறமைகளை வளர்ப்பது, புதுமைகளை புகுத்துவது மற்றும் அனுபவத்துடன் கூடிய கல்வி கற்பித்தல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரை யன் கூறியதாவது:
இந்த அங்கீகாரம் கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த அர்ப் பணிப்புக்கு கிடைத்த சான்றாகும். இத்தகைய சிறப்பை அடைய அவர்கள் அயராது பாடுபட்டு இருக்கிறார்கள். இது மிகுந்த பாராட்டுக்குரியது.

என்ஐஆர்எப் பட்டியலில் 64-வது இடம் என்பது, எங்கள் கல்லூரி ஒரு முதன்மையான கல்லூரி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இது இப்பலைக்கழகத்திற்கு மிகுந்த பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் எண் ணத்தை எங்களுக்கு தூண்டுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img