fbpx
Homeபிற செய்திகள்சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்கள்

சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்கள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரியலூரில் (ஜனவரி 19 முதல் 22 வரை) மாநில சிலம்பம் போட்டி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட PSGR கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி மேரி பிரியதர்ஷினி கம்பு சண்டையில் வெண்கல பதக்கம் வென்றார். மணி மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிமன்யு இரட்டை கம்பு வீச்சில் வெண்கல பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற வீரர்களை சிலம்பாலயா பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img