fbpx
Homeபிற செய்திகள்8 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தி ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் சாதனை

8 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தி ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் சாதனை

ஹைதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நகை நிறுவனமான ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் 8 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து, இத்தகைய மதிப்புமிக்க மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நகை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த முக்கியமான நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பலக்னுமா அரண்மனையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

பாலிவுட்டின் பேஷன் அடையாளமான திஷா பதானி,
ஷிவ் நாராயணின் மதிப்புமிக்க நகைகளை அணிந்துகொண்டு தோன்றினார்.
நான்கு சாதனை படைத்த படைப்புகளில் முதலாவது கணேஷ் பெண்டன்ட் (Ganesh Pendant).

1011.150 கிராம் எடை கொண்ட மிகவும் கனமான பெண்டன்ட் இது. 11,472 வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த பெண்டன்டே அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட ஒன்றும்கூட.

புதிய சாதனை படைத்த பெண்டன்ட் 1681.820 கிராம் எனும் அதிக எடை கொண்ட பெண்டன்ட், 54,666 வைரங்களுடன், அதிக வைரங்களைக் கொண்ட பெண்டன்ட் என பெருமைகளைப் பெற்றது.

ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸின் மற்றொரு தலைசிறந்த படைப்பான சட்லடா நெக்லஸ் பிராண்டின் மூன்றாவது சாதனை படைத்த படைப்பாகும்.

இந்த ஏழு அடுக்கு நெக்லஸ் 315 மரகதக் கற்கள், 1971 சிறந்த வைரங்களுடன், அதிக மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ், அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் என்ற சாதனைகளைப் படைத்திருக்கிறது.

ஷிவ் நாராயண் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் துஷார் அகர்வால் சாதனைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img