fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் முதல் முறையாக கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில் தேசிய மாதவிடாய் சுகாதார மாநாடு

இந்தியாவில் முதல் முறையாக கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில் தேசிய மாதவிடாய் சுகாதார மாநாடு

கோவை கற்பகம் உயர்கல்வி கழகம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) எப்-பிளாக் மாநாட்டு அரங்கில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை மையம் சார்பில் “மாதவிடாய் சுகாதாரம்: தடைகளைத் தகர்த்து, விழிப்புணர்வை உருவாக்குவோம்“ என்ற தலைப்பில் இந்தியாவின் முதல் தேசிய மாநாடு நடைபெற்றது.
இம்மாநாடு கருப்பா பவுண்டேஷன் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (மேட்டுப் பாளையம், கோவை) சாக்ஷி, (டெல்லி), மற்றும் ஸ்னாப் (கோவை) எம்பவர் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று மாதவிடாய் சுகாதாரம், பெண்கள் நலம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அ.தர்மராஜ் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கற்பகம் உயர்கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.வசந்தகுமார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவி தலைமை வகித்தார்.
இடைத்துறை ஆராய்ச்சி மையத் தலைவர் கேப்டன் டாக்டர் கே.பி.ஸ்ரீதர் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, மாநாட்டு மலரை வெளியிட்டார்.


தமிழ்நாடு அரசின் மூத்த எஸ்டிஜி ஆலோசகர் டாக்டர் ஆர்.சுஜாதா தலைமை உரையாற்றி, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு மற்றும் நிலை யான வளர்ச்சியின் அவசியத்தை வலி யுறுத்தினார். தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை பொறுப்புத் தலைவர் டாக்டர் கே.மங்கையர்க்கரசி மற்றும் ஸ்னாப் எம்பவர் நிறுவன நிறுவனர் ஏ.பவித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.


கற்பகம் உயர்கல்வி கழகம் பதிவாளர் டாக்டர் பி.வி.பிரதீப் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை மையத்தின் செயல் பாட்டு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் டாக்டர் எஸ்.நித்யா நன்றி கூறினார். இம்மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சார்ந்த பங்கேற்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, மாதவிடாய் சுகாதாரம், பெண்கள் நலம் மற்றும் சுகாதார புதுமைகள் தொடர்பான பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img