Homeபிற செய்திகள்வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தேர்வு

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தேர்வு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடக்கிறது. இப்பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நுண் பார்வையாளர்களை முதற் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, மேற்கொண்டார். மொத்தம் 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 நபர்கள் முதற் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரன், தேர்தல் வட்டாட்சியர் கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img