fbpx
Homeபிற செய்திகள்இரண்டாவது நேஷனல் பெடரேஷன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டிகளில் கோவை மாணவ, மாணவிகள் அசத்தல்

இரண்டாவது நேஷனல் பெடரேஷன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டிகளில் கோவை மாணவ, மாணவிகள் அசத்தல்

இரண்டாவது நேஷனல் பெடரேஷன் சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டி அகில இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் திருச்செங்கோடு சண்முகா கல்வி குழுமம் இணைந்து ஆகஸ்ட் 16, 17, 18 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பில் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து 45 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

மினி சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் ஜேக்குலின் பீட்டர் இரட்டை கம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை வெள்ளி, நேகா ஸ்ரீ மான்கொம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை வெண்கலம், ஹன்சிகா நடுகம்பு அலங்காரவீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், வைஷ்ணா கம்பு சண்டை வெள்ளி, எம். ஹரிணி ஒற்றை சுருள்வாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், தன்யா ஸ்ரீ ஒற்றைவாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம் வென்றனர்.

மினி சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் விளாடிமர் டோனி ஒற்றைவாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை வெண்கலம், நவினேஷ் கம்பு சண்டை வெண்கலம், நிஷ்வந்த் விஜயன் மற்றும் அர்ஜித் ஆயுதகோர்வை ஜோடி தங்கம், நிஷ்வந்த் விஜயன் கம்பு சண்டை தங்கம், அர்ஜித் கம்பு சண்டை வெண்கலம், ஸ்ரீ தர்ஷன் இரட்டைவாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், ஹாரீ க்ளாவர் ஒற்றை சுருள்வாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், ரக்க்ஷன் மான்கொம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை, சந்தோஷ் இரட்டை சுருள்வாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை வெள்ளி, பிரேம்சாய் இரட்டை கம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை வெள்ளி, நிஷ்வந்த் குத்துவரிசை வெள்ளி, கம்பு சண்டை வெண்கலம், யுவதர்ஷன் வேல்கம்பு வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெள்ளி, அக்க்ஷன் நடுகம்பு அலங்காரவீச்சு வெள்ளி, கம்பு சண்டை வெண்கலம், ஜித்தேஷ் கம்பு சண்டை வெண்கலம் வென்றனர்.

சப்ஜுனியர் பெண்கள் பிரிவில் தக்க்ஷிதா வேல் கம்பு வீச்சு வெள்ளி, கம்பு சண்டை வெள்ளி, கயன்தர்ஷனி நடுங்கம்பு அலங்கார வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெண்கலம், ஏ. ஹரிணி கம்பு சண்டை வெண்கலம், இனியா ஒற்றை கம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், கவிநேத்ரா இரட்டை சுருள்வாள் வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெண்கலம், அஞ்சனா ஒற்றைவாள் வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெண்கலம் வென்றனர். சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் சஷ்வந்த் விஜயன் நடுங்கம்பு அலங்கார வீச்சு வெள்ளி, கம்பு சண்டை தங்கம், ஜோ அர்னவ் ஒற்றைவாள் வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெண்கலம், பிரனேஷ் இரட்டை சுருள்வாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை வெண்கலம், ரித்திக் இரட்டை கம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை வெள்ளி, சஞ்சித் ஒற்றை சுருள்வாள் வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம், சரண் வேல்கம்பு வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெண்கலம், ஹரீஸ் அலங்கார வீச்சு வெண்கலம், கம்பு சண்டை வெள்ளி வென்றனர்.

சீனியர் ஆண்கள் பிரிவில் அபிமன்யு இரட்டை கம்பு வீச்சு தங்கம், கம்பு சண்டை தங்கம் வென்றார்.

படிக்க வேண்டும்

spot_img