Homeபிற செய்திகள்முதல்வர் ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் 'ஸ்டாலின் தொடரட்டும்' பதாகை ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் உற்சாகம்

முதல்வர் ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும்’ பதாகை ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் உற்சாகம்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வித்தியா சமான முறையில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

“ஸ்டாலின் தொடரட்டும்“ என்ற வாசகத்தின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனி பதாகைகளாக ஏந்தி, அவற்றை ஒன்றிணைத்து வரிசையாகப்பிடித்து நின்றனர். முதலமைச்சருக்கு ஆதரவாக அவர்கள் காட்டிய இந்த ஒருமித்த ஆதரவு காண்போரைக் கவர்ந்தது.

பரப்புரை மைதானத் திற்கு வந்திருந்த பலரும் இந்த காட்சியைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் மிக வேகமாகப் வைரலாகி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img