கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் பொது மேடையில் விளக்கேற்றும் விழா நடைபெற்றது. இவ்விழா இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக நடத் தப்படுகின்றது. கல்விப்புல முதன்மையர் முனைவர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிறுவனத்தின் வேந்தரும், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங் காவலருமான முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் விளக்கேற்றும் விழாவிற் குத் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க, மாணவியர்கள் அனைவரும் கைகளில் தீபம் ஏந்தி உறுதி ஏற்றனர். இவ்விழாவில், பல் கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் மற்றும் பதிவாளர் முனைவர் ஹை.இந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக கனரா வங்கியின் இயக்குநர் மற்றும் இன்ஃபினைட் சேவா மையத்தின் தலைவர் நளினி பத்மநாபன் கலந்து கொண்டு தாய் விளக்கை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
பல்வேறு புலத்தைச் சார்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 107க்கும் மேற்பட்டோரும் மற்றும் இளங்கலை, முதுகலைப் பட்ட மாணவியர் ஏறத்தாள 2,100 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறை வாக உளவியல் துறை உதவிப்பேராசியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் அமுதா நன்றியுரை வழங்கினார்.



