fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சினாரியோ-2025 மாணவர் கலைத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சினாரியோ-2025 மாணவர் கலைத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், “சினாரியோ-2025” என்ற மாணவர் கலைத் திருவிழா, நேற்று (3ம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது.

இதன் தொடக்க விழாவிற்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து “சிர்லயா” இசை வாத்தியக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடை பெற்றது. அதைத் தொடர்ந்து, தனிநபர் பாடல், குழுப் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், இசைக் கருவிகள் மீட்டுதல், மௌன நாடகம், தனிநபர் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இவற்றில் ஆயிரக்க ணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்ப டுத்தினர். இதை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.

இதனால் கல்லூரி வளாகமே கொண் டாட்டத்தில் திளைத் திருந்தது. முன்னதாக மாணவர் மன்றத் தலைவர் எஸ்.கே. கௌதம்குமார் வரவேற்றுப் பேசினார்.

முடிவில் கவின் கலை மன்றத் தலைவர் என்.ஹரி ஆதர்ஷ் நன்றி கூறினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்றத்தினர் சிறப்பாக செய்துள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் (4ம்தேதி) விழா தொடர்ந்து நடைபெறுகிறது.

மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், வெற்றியாளர்களுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்குகிறார்.

படிக்க வேண்டும்

spot_img