fbpx
Homeபிற செய்திகள்சவீதா, சிமாட்ஸ் இணைந்து நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

சவீதா, சிமாட்ஸ் இணைந்து நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாகவும், எய்ட்ஸ் வராமல் தடுப்பது குறித்தும் கட்டுப் படுத்துவது குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் ரெட் ரிப்பன் கிளப், சவீதா பல்கலைக்கழகம் மற்றும் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனையின் தொற்று நோய்களுக்கான மையம், நுண்ணுயிரியல் துறை ஆகி யவை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

பேரணியில் சிமாட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், டாக்டர் கள் மற்றும் முதுகலை மாணவர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர். பேரணி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து திருவேற்காடு ஆர்ச் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் அமெரிக்காவின் அட் லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் அமரா ராமா ராவ், அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்ச்சி பிரிவு துணைத் தலைவருமான டாக்டர் சித்தப்பா ரெட்டி, எமோரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் விஜயகுமார் வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எய்ட்ஸ் நோய் பற்றியும் ஹெபடைடிஸ் பி வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img