நூற்றாண்டு வைர விழாவில் தடம் பதிக் கின்ற கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் செலின் வினோதினி வரவேற்றார்.
பள்ளி நிர்வாகத் தலைவர் மெர்சி ஓமன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளித் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கற்பித்தல் பணியில் வெள்ளி விழா கண்ட ஆசிரியர்களுக்கு வால்ஷா ஜார்ஜ் விருதுகளை வழங்கினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
முன்னாள் மாணவர் கள் சார்பாக சிறப்பு விருந்தினர் கொங்கு மண்டல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு புதல்வரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான ஜி.டி. கோபாலு-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அவர் பேசும்போது, ஜி.டி.நாயுடு ஆங்கில மொழியைக் கற்பதற்காகவும், சொந் தமாக ஒரு பேருந்தினை வாங்குவதற்காகவும், ஸ்டேன்ஸ் பள்ளி நிறு வனர் சர்.இராபர்ட் ஸ்டேன்ஸிடம் பணியில் சேர்ந்தார்.
ஜி.டி.நாயுடுவின் விருப்பத்தை அறிந்த ஸ்டேன்ஸ், பேருந்து வாங்குவதற்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து உதவினார். ஒற்றைப் பேருந்தில் தொ டங்கப்பட்ட இந்நிறுவனம் சுமார் 600 பேருந்துகளைக் கொண்டதாக வானுயர வளர்ந்து நிற்கிறது.
அது மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் பல்வேறு தொழிலகங்களுக்கு ஸ்டேன்ஸ் ஒளியேற்றி வைத்தார் என்றார். பள்ளி துணை முதல்வர் முனைவர் வ.திவாகரன் நன்றி கூறினார்.