fbpx
Homeபிற செய்திகள்தேசிய மனித உரிமைகள் நீதிமன்ற போட்டியில் விருதுகள் வென்ற சவீதா சட்டப்பள்ளி மாணவர்கள்

தேசிய மனித உரிமைகள் நீதிமன்ற போட்டியில் விருதுகள் வென்ற சவீதா சட்டப்பள்ளி மாணவர்கள்

ஒடிசா மாநிலத்தில் சேவியர் சட்டக் கல்லூரி யில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய முதல் தேசிய மனித உரிமைகள் விச £ரணை நீதிமன்ற போட்டி 2002-ல் சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சவீதா சட்டப் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றனர். மேலும் இப்பள்ளி 2வது இடத்திற்கான விருதையும் பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன.
இதில் சவீதா சட்டப்பள்ளி மாணவர் கள் 4 விருதுகளை வென்று இரண்டாம் இடம் பிடித்தனர்.

சிறந்த ஆராய்ச்சியாளர் விருது

இதில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது முகமது ஹாரூண் என்ற மாணவருக்கும், சிறந்த பேச்சாளர் விருது சங்கேத் மொஹபத்ராவுக்கும், குழு செயல்பாட்டில் 2வது இடத்திற்கான விருதும், 36 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இந்த குழுவில் 5வது ஆண்டு மாணவர் சங்கேத் மொஹபத்ரா, 3வது ஆண்டு மாணவர் கிருஷ்ணாஆதித்யா, 4வது ஆண்டு மாணவர் முகமதுஹாரூண் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img