Homeபிற செய்திகள்குழந்தைகள் தின விழா கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

குழந்தைகள் தின விழா கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகள் குழந்தைகள் தினத்தன்று நான்கு அரசுப்பள்ளிகளில் நடத்தப்பட்டது.

இப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மணிஅரசி தலைமை வகித்தார்.பள்ளி ஆசிரியை காந்திமதி அனைவரையும் வரவேற்றார்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத் தின் சார்பில் பொது மேலாளர் கே.எஸ். ராஜாமணி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். தொழிற்சாலை மேலாளர் எஸ்.ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி. விஜயகுமார் பேசியதாவது: குழந்தைகளிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலமாக அவர்களிடம் தன்னம்பிக்கையையும் அவர்களிடம் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிப்ப டுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்றவர்கள் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். போட்டிகளில் தோல்வி அடைந்தவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது.

தோல்விதான் வெற்றிக்கான முதற்படி. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மேலும் மேலும் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் மீண்டும் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இப்போட்டிகளில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கு கொண்டனர். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக எஸ்.அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img