fbpx
Homeபிற செய்திகள்‘சேவ்’ அமைப்பின் 30-ம் ஆண்டு விழா

‘சேவ்’ அமைப்பின் 30-ம் ஆண்டு விழா

திருப்பூர் ‘சேவ்’ தன்னார்வ தொண்டு அமைப்பின் 30-வது ஆண்டு கால சேவை குறித்த பாராட்டு விழா நடந்தது.
‘சேவ்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆ.அலோசியஸ் தலை மை தாங்கி பேசியதாவது:

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பணியில் முனைப் பாக செயல்பட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத திருப்பூர் என முன்மொழிந்து 2019-ல் முறையாக மாநாடு நடத்தி அறிவிக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எங்கும் இல்லாத சாதனையை திருப்பூரில் நடத்தி காட்ட முடிந்ததற்கு காரணம் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் முழுஆதரவு கிடைக்கப்பெற்றதுதான் என்றார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிக் கடன், சிறு தொழில் என பல ஆயிரம் பெண்கள் ‘சேவ்’ உதவியுடன் பொருளாதார முன்னேற்றத்தில் பயன் அடைந்தார்கள்.

குறிப்பாக விழிநிலை மக்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்து தங்களது குழந்தைகளின் கல்வியை உறுதி செய்துள்ளனர்.
தொழிலாளர் நலன், பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் பற்றிய பயிற்சிகள் ஏற்றுமதி நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் கல் வியை தொடரும் வகையில் மையங்கள் துவங்கி கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூரில் வார்டு வாரியாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கல்வியானது ஆண், பெண், வளரிளம் பருவத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 10,000 வளரிளம் பருவத்தினருக்கு தையல் பயிற்சி மற்றும் பின்னலாடை சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களது தொழில் திறன் மேம்படுத்தப்பட்டு கூடுதல் ஊதியத்தை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் வரவேற் றார். அலுவலக நிர்வாக அந்தோணி செல்வி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img