சத்தியமங்கலம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள அரசு உண்டு உறை விட பள்ளியில் முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் தலைமை யில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசனூர் சுப்பிரமணியம் ஒருங்கிணைப்பாளராக இருந்து விழாவினை சிறப்பித்தார். விழாவில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு முன்னாள் மாண வர்களுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக உதவுவதாக கூறி விழாவினை சிறப்பித்தனர்.