fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுக்கு வரும் 23ல் மாநில அளவிலான திறன் மேம்பாடு, கலை விழா போட்டி

பள்ளி மாணவர்களுக்கு வரும் 23ல் மாநில அளவிலான திறன் மேம்பாடு, கலை விழா போட்டி

சேலம், சோனா கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான திறன் மேம் பாட்டு போட்டி, கலை விழா வரும் 23ம் தேதி நடை பெற உள்ளது.

இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது. இப்போட் டியில் இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளர், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், வினாடி வினா, பாடல் மற்றும் இசை, பேச்சுப் போட்டி, பழம்/காய்கறி செதுக்குதல், மைம், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சேலம் மற்றும் சுற்று வட்டார பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பள்ளி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் என சோனா கல்லூரி துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில் துறைத்தலைவர் ரேணுகா, விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்வடிவு, மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img