ஜே.கே. டயர் -எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் கோவை கரி மோட்டார் ஸ்ஸ்பீட்வேயில் இன்று மாலை துவங்குகிறது. இந்தப் போட்டிகள் வரும் 19-ந்தேதி வரை நடை பெறுகிறது.
பிரீமியர் போட்டியான எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் தேசிய சாம்பியன்ஷிப்பிற்காகவும், ஜேகே டயர் நோவிஸ் கோப்பைபிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பிற்காகவும், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகேடயர் வழங்கும் 250 கோப்பைக்காக வீரர்கள் இடையே கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.