மலபார் கோல்டு டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி சேலம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக, சேலம் ஸ்வர்ணபுரி வி.எம்.கே. வி எம் ஜி. திருமண மஹாலில் நடைபெற்றது.
சிஎஸ்ஆர் நிதி
சிறப்பு அழைப்பாளராக சேலம் சட்டமன்ற உறுப் பினர் இரா.அருள், அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 46 பள்ளிகளைச் சேர்ந்த 289 மாணவிகளுக்கு சிஎஸ்ஆர் நிதியில் மலபார் குழுமம் சார்பாக ரூ. 25,62,000/- காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்.
மேச்சேரி அரசு மகளிர் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனா மகேஸ்வரி, தொள சம்பட்டி அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வநாதன், மலபார் கோல்டு அண்ட் டை மண்ட்ஸ் சேலம் கிளை தலைவர் ராஜசேகரன், கிளை இணைத் தலைவர் பிரபு ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக ரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகளே காரணங்கள் ஆகும். லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற் றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங் களுக்கு மலபார் குழுமம் செலவு செய்கிறது.