இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் விதமாக வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா குளோபல் கேம்பஸ் மருத்து வமனை கேத்லேப் மற்றும் இதய நோய்க்கான தீவிர சிகிச்சை பிரிவுடன் நவீன மேம்படுத்தப்பட்ட ‘இதய பராமரிப்பு மையத்தை’ திறந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மையத்தை திறந்து வைத்தார்.
அரவிந்த் ஐ கேர் சிஸ்டம்ஸ் திட்ட இயக் குநரும், சென்னை அர விந்த் கண் மருத்துவ மனை தலைமை மருத் துவ அதிகாரியுமான டாக்டர் எஸ். அரவிந்த், நடிகையும், எழுத்தாளரும், தொழில்முனைவோருமான அனு ஹாசன், வேலப்பன் சாவடி டாக்டர் மேத்தா குளோபல் மருத்துவமனை யின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நுண்துளையீட்டு இருதயநோய் நிபுணர்
டாக்டர் மேத்தா இருதய அறிவியல் துறை பிரிவின் நுண்துளையீட்டு இருதயநோய் நிபுணர் டாக்டர் நரேந்திரன் கூறி யதாவது:
வாரத்தில் 7 நாளும் செயல்படும் இந்த மையத்தில் மேம்படுத் தப்பட்ட ஜிஇ கேத்லேப், இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அவ சரச் சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நுண்துளையீடு இல்லாத 2டி எகோ, டிஎம்டி, 24 மணிநேர கண்காணிப்பு வசதி மற்றும் ஈசிஜி ஆகிய வசதிகள் உள்ளன.
இதயம் சார்ந்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவற்றை கண்டறிவதற்கு வசதிகாக இம்மையத்தில் டாக்டர்களுக்கு உதவிடும் வகையில் ஏராளமான நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
இதய சம்பந்தமான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண் டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்றார். டாக்டர் மேத்தா மருத்துவமனையின் குழும தலைவர் டாக்டர் சரவண குமார் கூறுகை யில், இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் நோய்கள் காரணமாக இறப்பவர்களின் விகிதத்தில் இதயம் சார்ந்த நோய்களால் இறப்பவர்களின் விகிதம் அதிகமாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் சிறப் பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும் என்றார்.
டாக்டர் மேத்தா மருத்துவமனைகளின் துணைத் தலைவர் சமீர் மேத்தா கூறுகையில், கடந்த 90 ஆண்டுகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற் கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை வெற்றிக ரமாக செய்துள்ளோம். இங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன என்றார்.