fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் ஆல்டென் இந்தியா

இந்தியாவில் விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் ஆல்டென் இந்தியா

ஆல்டென் குழுமத்தின் துணை நிறுவனமான ஆல்டென் இந்தியா, இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது.
பெங்களூர் மற்றும் புனேவை தொடர்ந்து இந்தியாவின் பிற நகரங் களில் தனது விரிவாக்க பணிகளை தொடர்ந்து வருகிறது.

ஆல்டென் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி 8000 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், வரும் 2025ம் ஆண்டுக்குள் மேலும் 7000 பொறியியல் பட்டதாரிகளை பணியில் இணைத்து, இந்தியாவில் தங்களது பணியாளர் எண்ணிக்கையை 15000ம் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ஆல்டென் இந்தியா அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் அதன் பணி யாளர்களை இரட்டிப்பாக்க உள்ளது. மனிதவளத்தில் இந்த மிகப்பெரிய முதலீட்டின் மூலம், குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஆல் டென் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு

இந்தியாவில் அதன் செயல்பாடுகள் மூலம் நிறுவன வருவாயில் 100% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆல்டன் குழுமத்தின் ஆசிய பசிபிக் தலைவர் பாஸ்கல் அமோர் கூறுகையில், இந்தியாவில் பல்வேறு வகையான திறமைகள் உள்ளதால், புதிய தொழில்நுட்பப் பகுதிகளுக்கு எங்களது குழுமத்தை தயார்படுத்திக்கொள்ள இது உதவும். இந்தியாவில் முதலீடு செய்வது முதலாளி மற்றும் பணியாளர் இருவருக்கும் வெற்றிகரமான சூழ் நிலையாக உள்ளது என்றார்.

ஆல்டென் இந்தியா நிறு வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உத்தம்குமார் சங்க்பால் கூறுகையில், “அதிக பணியாளர்களை அமர்த்துவதன் மூலம் ஆல்டென் இந்தியா எங்கள் உலகளாவிய வணிகத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கவுள்ளது.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக அதிக வளர்ச் சியைப் எதிர்பார்க்கிறோம். இது இந்திய இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் உயர வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் நிறைய திறன் வாய்ந்த இளைஞர்கள் உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் அதிக முதலீடு செய்து தொழில்நுட்பங்களை உருவாக்க ஆல்டென் குழுமம் முடிவு செய்துள்ளது. திட்டமிடல் முதல் சந்தைக்குப் பிந்தைய சேவைகள் வரை, ஆல்டென் இந்தியா பல்வேறு களங்களில் ஏராளமான சேவைகளை உள்ளடக்கிய நிறுவனமாகும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img