சேலம் எம்மீஸ் சிறப்பு பள்ளி மற்றும் கமலம் மறுவாழ்வு மையம் இணைந்து கமலம் கர்னிவெல் 2023 என்ற மாபெரும் போட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று நாட்கள் நடத்தியது.
இப்போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு காசோலை, கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பரிசு பொருள்களாக குக்கர், ஜூட் பேக் வழங்கப்பட்டது.
ராஜேஸ்வரி, சந்திரமௌலி டி.சி.பி. சசிகலா சுரேஷ் சரஸ்வதி நர்சிங் ஹோம், ஜெயக்குமார், ரோகிணி சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினர். பள்ளித் தாளாளர் ஹேமா பிரைட் தலைமை தாங்கி நடத்தினார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் டோமினிக், சிறப்பு ஆசிரியர்கள், உதவியாளர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.