fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேலம் கருங்கல்பட்டி மெயின் ரோடு ஸ்ரீ ராஜேஸ்வரி நர்சரி & பிரைமரி பள்ளியில் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு குரு ஜிம் மற்றும் சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

இதில் நோயாளிகள் முகாம் தினத்தன்று சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அவர்களுக்கு உள்விழிலென்ஸ், அறுவை சிகிச்சை மருந்து தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து இலவசம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

கிட்டப்பார்வை , தூரப்பார்வை வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறுகள் இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்பட்டு குறைந்த விலையில் கண் கண்ணாடி முகாம் நடத்தும் இடத்திலேயே வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும் சண்முகா மருத்துவமனை மருத்துவர் பன்னீர்செல்வம், மாமன்ற உறுப்பினர் சரவணன், சமூக ஆர்வலர் கோபிநாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம் மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img