fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாநகராட்சியில் ரூ.675.87 கோடியில் 1,231.591 கி.மீ. நீளத்திற்கு சாலைப் பணிகள்

சேலம் மாநகராட்சியில் ரூ.675.87 கோடியில் 1,231.591 கி.மீ. நீளத்திற்கு சாலைப் பணிகள்

சேலம் மாநகராட்சி, அம் மாப்பேட்டை மண்டலம், கோபால் செட்டி தெரு மற்றும் பசுபலகுருநாதர் தெருவில் கால் வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் செய்தியாளர் பயணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி ஆணையாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:
பொதுமக்களுடன் தொடர் பில் நாள்தோறும் அதிகளவில் பணியாற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் துறைக்கென பல்வேறு திட் டங்களை அறிவித்துள்ளார் முதல்வர். இத்திட்டங்கள் முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் 91.34 சதுர கிலோ மீட்டர் பரப் பளவைக் கொண்டுள்ளது. தற்போது, சுமார் 9,66,191 மக்கள் தொகையை கொண்டுள்ள, சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன.
சேலம் மாநகராட்சியில் 1,037 சாலைகளும், 1200.95 கி.மீ. கால்வாய்களும் அமைந்துள்ளன.

மக்கள்தொகை அதிகரிப்பிற் கேற்ப, சேலம் மாநகராட்சியில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அதிக அளவிலான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், 2022-23 மற்றும் 2023-24-ம் நிதியாண்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 346 சாலைகள் 334.201 கி.மீ. நீளத்திற்கு புதிதாக அமைக்க ரூ.177.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று வருகிறது.

15-வது மத்திய நிதிக் குழு மானிய நிதியின் கீழ் 211 சாலைகள் 897.39 கி.மீ நீளத் திற்கு புதிதாக அமைக்க ரூ. 497.89 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் 557 சாலைகள் 1,231.591 கி. மீ. நீளத்திற்கு புதிதாக அமைக்க ரூ.675.87 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2022-23 நிதியின் கீழ் 317 சாலைகள் 61.105 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக அமைக்க ரூ.312.23 கோடி மதிப்பிலான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் தற்போது, 57 சாலைப் பணிகள் ரூ.66.34 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 260 சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதேபோன்று நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட் டம் 2023-24 நிதியின் கீழ் 368 சாலைகள் 52.719 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக அமைக்க ரூ.177.19 கோடி மதிப்பில் என மொத்தம் 113.824 கி.மீ நீளத்திற்கான 577 சாலைப் பணிகள் ரூ.489.42 கோடி மதிப் பில் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, மாநில நிதி ஆணைய நிதியின் கீழ் 137 மண் சாலைகளை 14.950 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய தார் சாலைகளாக மாற்றுவதற்கு ரூ.96.90 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் தரமாகவும், குறிப் பிட்ட கால அளவில் செய்து முடித்திடுவதை உறுதி செய்யும் வகையில் சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், கோபால் செட்டி தெருவில் 400 மீட்டர் நீளத்திற்கு யிசிஙி இயந்திரம் மூலம் சாக்கடைக் கால்வாய் தூர்வாரப்பட்டு மண் கழிவுகள் அகற்றும் பணிகள் மற்றும் பசுபலகுருநாதர் தெருவில் 123.00 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img