தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உப யோகத்திறிகு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இதற்குத் தகுதியாக நிர்ணயம் செய் யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் அருகே விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. கலைஞர் மக ளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே நேரடியாக குடும்ப அட்டைதார்கள் வீட்டிற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர் விண்ணப் பத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தும், டோக்கனில் முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை பதிவு செய்தும் வழங்குவார்.
ஒரு நபர் பல விண்ணப்பங்களைக் கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை அந்த குடும்பத் தலைவியே அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங் கிக் கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப் பித்து கைவிரல் ரேகை மூலம் பதிவுகள் செய்திட வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப் பப்பதிவு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முகாம் நேரம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரை ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப் பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விபரங்கள் குறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சந் தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2450034, 35, வட்டாட்சியர் அலு வலகங்கள் உதகை 0423-2442433, குந்தா 0423-2508123, குன்னூர் 0423-2206102, கோத்தகிரி 04266-271718, கூடலூர் 04262-261252, பந்தலூர் 04262-220734.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.