Homeபிற செய்திகள்வீரபாண்டி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்

வீரபாண்டி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.1,207 கோடி மதிப்பீட்டில் 89,647 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீரபாண்டி மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொண்டபோது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபார்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1,207 கோடி மதிப்பீட்டில் 89,647 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்றைய தினம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உத்தமசோழபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளையும், வீரபாண்டி ஊராட்சியில் கிராமப்புற விளிம்புநிலை மக்களுக்காக கட்டப்பட்ட வீடு ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்த்து புனரமைக்கப்பட்டுள்ள பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றுப் பண்ணையில் புதிய செடிகள் வளர்க்கப்பட்டு வருவதையும், அக்கர பாளையம் ஊராட்சியில் ரூ.1.94 லட்சம் மதிப்பீட்டில் மண் கரை அமைக்கப் பட்டுவரும் பணியினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறைகள், எட்டிமாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.80.03 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், முருங்கப்பட்டி ஊராட்சியில் ரூ.9.39 லட்சம் மதிப்பீட்டில் குட்டை அமைக்கப்பட்டுவரும் பணியினையும், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மூடுதுறை ஊராட்சியில் ரூ.26.69 இலட்சம் மதிப்பீட்டில் குழாய் வசதி அமைக்கும் பணி என வீரபாண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மட்டும் ரூ.6.82 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருகலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலைகள், பொது விநியோகக் கடையின் கட்டடப் பணிகள், நூலகம் கட்டும் பணிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறைகள், கதிரடிக்கும் தளம் அமைக்கும் பணி மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், கோட்ட வரதம்பட்டி ஊராட்சி, ஆவரங்கம் பாளையத்தில் கட்டப் பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் சுண்ணாம்புக்குட்டை முதல் தேவண்ண கவுண்டனூர் வரையுள்ள சாலை மேம்படுத்தப்பட்டுள்ள பணியினை ஆய்வு மேற்கொண்டு நிர்ணயி க்கப்பட்ட அளவீட்டில் உரிய தரத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேவண்ணகவுண்டனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஈசிகாடு பகுதியில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு வரும் பணி, சின்னகவுண்டனூர் ஊராட்சி கோபாலனூரில் கட்டப்பட்டு வரும் பொது விநியோகக் கடையின் கட்டடப் பணி, மோத்தியனூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடப் பணிகள் என சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மட்டும் ரூ.7.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வீரபாண்டி மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்றுவரும் 23 திட்டப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் இராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமலர், தனபால், சீனிவாசன், மலர்விழி, உதவிப் பொறியாளர்கள் துரைசாமி, குமரவேல் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், செய்தி யாளர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img