சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில், மத்திய திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழக னின் நூற்றாண்டு நிறைவு விழா, பூத் கமிட்டி மற்றும் கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் சுபாசு, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப் பினரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான இரா. இராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



