கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்க ளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ள கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி யில் ரூ.70,77,713-ம், கூட்டு றவு கல்வி நிதியில் ரூ.45,66,733ம் மொத்தம் ரூ.1,16,44,446-க் கான காசோலை வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் இக்கா சோலையை வழங்க, கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் கோ.க.மாதவன் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊராக வளர்ச்சி வங்கி இணைப்பதிவாளர் / பொதுமேலாளர் ஆனந்தி, துணைப்பதிவாளர் / முதல்வர் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் பெ.கிருஷ்ணன், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் தா.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.