fbpx
Homeபிற செய்திகள்3 கிராம் தங்கம் உள்பட தலா ரூ.60 ஆயிரத்தில் சீர்வரிசை 23 இணைகளுக்கு கோவிலில் திருமணம்...

3 கிராம் தங்கம் உள்பட தலா ரூ.60 ஆயிரத்தில் சீர்வரிசை 23 இணைகளுக்கு கோவிலில் திருமணம் மகிழ்ச்சியில் ஈரோடு தம்பதிகள் முதல்வருக்கு மனதார நன்றி

தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்புகள் 2022-2023 அறிவிப்பு எண் 14-ன் படி திருக்கோயில்களில் ஓர் இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


சட்டமன்ற அறிவிப்பினை தொடர்ந்து, சென்னையில் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவிலில் 04.12.2022 அன்று மங்கள நாணை எடுத்துக்கொடுத்து 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களுக்கு வாழ்த்துகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநியைலத்துறை, இணை ஆணையர் மண்டலத்திலும் 23 இணைகளுக்கு 04.12.2022 அன்று ஈரோடு நகர், திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி கலை அரங்கில் திருமணமும், திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில் மண்டபத்தில் விருந்தும் அளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனரக். நாடாளுமன்ற, சட்டமன்ற, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தேவையான அனைத்தும்…
இலவச திருமண விழாவில் பங்கேற்கும் இணைகளுக்கு 3 கிராம் திருமாங்கல்யம், மணமக்களுக்கான பட்டு வேட்டி, பட்டு சட்டை, துண்டு, பட்டு சேலை, ரவிக்கை, பித்தளை குத்துவிளக்கு-2, சந்தனக்கிண்ணம், குங்குமசிமிள், மைகோதி, பித்தளை பூஜை தட்டு, பூஜை மணி, போவினி-2, தாம்பூளத்தட்டு, 2 தட்டு, 2 சிறிய டம்ளர், அன்னக்கூடை, 2 பெரிய டம்ளர், பால் காய்ச்சும் பாத்திரம், பாத்திரம், ஹாட்பாக்ஸ், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, போர்வை, காய்வடிக்கூடை, சில்வர் டப்பா, கிரைண்டர், கேஸ் அடுப்பு, பெரிய சில்வர் அண்டா, பவானி ஜமக்காளம், மிக்சி மற்றும் வெள்ளி மெட்டி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படட்டன. இதன் மதிப்பு இணை ஒன்றுக்கு ரூ.60,000/- ஆகும். மொத்தமாக 23 இணைகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு இணைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 20 நபர்களுக்கு சிற்றுண்டி, இரவு உணவு வழங்கப்பட்டது.


“நினைத்தே பார்க்க முடியவில்லை…”
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மணமுடித்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கூகலூர் பகுதியைச் சார்ந்த ஞானசுந்நரி க/பெ அஜீத்குமார் இணை தெரிவித்ததாவது:
எங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்காக அதிக கடன் வாங்கும் நிலை ஏற்படுமோ எனக் கருதி, திண்டல் முருகன் கோவிலில் எளிய முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம். திருமணத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் கோவிலில் விண்ணப்பிக்கும் போதுதான், முதல்வர் திருக்கோயில்களில் திருமணங்கள் எவ்வித செலவும் இல்லாமல் 04.12.2022 அன்று திருமணம் நடத்தப்படும் என்கின்ற விபரத்தினை கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.


திருமணத்திற்கு முதல் நாளே எங்களுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பான முறையில் உணவு வழங்கப்பட்டது. 04.12.2020 அன்று காலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் குடும்பத்தார் முன்னிலையில் நினைத்துக்கூட பார்க்காத வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


திருமணம் முடித்தவுடன் அமைச்சர் சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார். மனநிறைவோடு எங்கள் வாழ்க்கையை தொடங்க எங்களை போன்ற ஏழை, எளியோரின் திருமணத்தை நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
“கனவில் கூட வரவில்லை”


ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சி ராஜாஜிபுரம் பகுதியைச் சார்ந்த ரோஜா க/பெ அஜீத்குமார் இணை கூறியதாவது:
திருமணம் பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டு கோவிலில் 04.12.2022 அன்று எளிய முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம். எனக்கு ஏற்கனவே 2 சகோதரிகள் திருமணம் முடிந்த நிலையில் எனது திருமணத்திற்கான செலவுகளை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுமுதல்வர் எவ்வித செலவும் இல்லாமல் திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும் என்கின்ற விபரத்தினை அறிந்து கோவிலில் சென்று கேட்டோம். அவர்களும் 04.12.2022 அன்று செலவு இல்லா திருமணம் நடைபெறவுள்ளது என்றனர். அதன்படி, திருமணத்திற்கு தேவையான ஆவணங்களை கோவிலில் உள்ள அலுவலர்களிடம் சமர்ப்பித்தோம். திருமணத்திற்கு முதல் நாளும், திருமண நாள் அன்றும் நல்ல முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.


04.12.2020 அன்று காலை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் குடும்பத்தார் பங்கேற்க மிகவும் சிறப்பான முறையில், கனவில்கூட எங்களுக்கு இப்படி ஒரு முறையில் திருமணம் நடக்கும் என்று நினைக்காத வகையில் நடைபெற்றது. திருமணம் முடித்தவுடன் அமைச்சர் சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார். மிகவும் சந்தோசமாகவும், மனநிறைவோடும் எங்கள் இல்லற வாழக்கையை தொடங்க இத்தகைய திருமண திட்டத்தை நடத்தி தாயுள்ளத்தோடு எங்களுக்கு சீர்வரிசை செய்து அழகு பார்த்து எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய முதல்வருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்றனர்.
தொகுப்பு:


க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img