விடுதலை போராட்ட வீரர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செய்ய ஈச்சனாரி பகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அதை தொடர்ந்து மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், விவசாய அணி மகாலிங்கம் மற்றும் மதுக் கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக புறாக்களையும் பறக்க விட்டு மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் வேணுகோபால், ஜெயக் குமார், விக்னேஷ் உட்பட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



