fbpx
Homeபிற செய்திகள்ஆர்.ஒய்.ஏ காஸ்மோ அறக்கட்டளை சிறப்பு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி

ஆர்.ஒய்.ஏ காஸ்மோ அறக்கட்டளை சிறப்பு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி

ஆர்.ஒய்.ஏ காஸ்மோ அறக்கட்டளை சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அனுவ் ஜெயின் பங்கேற்கும் சிறப்பு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கடந்த மூன்று தசாப்தங்களாக மெடி பேங்க் திட்டம் “கேத் தி அன்கேர்ட்” மூலம் அனைவருக்கும் எளிதாக மருத்துவ சேவைகள் மற்றும் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆர்.ஒய்.ஏ காஸ்மோ அறக் கட்டளை, புகழ்பெற்ற பாடகர் மற்றும் பாடலாசிரியர் அனுவ் ஜெயின் பங்கேற்கும் சிறப்பு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியை ஹைவ்பி ஈவண்ட் உடன் இணைந்து சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி சாந்தி தேவி ஜவஹர்மல் பகல்நேர பராமரிப்பு மற்றும் நோயறிதல் மையம் மற்றும் மனோகர்ராஜ் கமலா கன்காரியா புற்றுநோய் கண்டறிதல் மையம் ஆகிய நிறுவனத்தின் முக்கிய மருத்துவ முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படு கிறது. இம்மையங்கள் மக்களுக்கு குறைந்த செலவில், தரமான மருத்துவ சேவை களை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

மருத்துவ சேவை முயற்சிகள் குறித்து சாந்தி தேவி ஜவஹர்மல் பகல்நேர பராமரிப்பு மையம் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல், தடுப்பு மருத்துவம் மற்றும் குறைந்த செலவிலான பரி சோதனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அனைத்து தரப்பினருக்கும் முழுமையான மருத்துவ மற்றும் டயக்னோஸ்டிக் சேவைகளை வழங்குகிறது.

மனோகர்ராஜ் கமலா கன்காரியா புற்றுநோய் கண்டறிதல் மையம், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேமோகிராம் மற்றும் பல்வேறு எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள் போன்ற மேம் பட்ட வசதிகள் மூலம், புற்றுநோய் மரண விகிதத்தை குறைக்க உதவுகிறது.

இது குறித்து மேனேஜிங் டிரஸ்டி கல்பேஷ் ஷா கூறுகையில், “சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு கரு ணையுடனும் எளிதாக அணுகக்கூடிய மருத்துவ சேவைகளை வழங்குவது தான் எங்கள் இலக்கு” என்றார்.

நிதி திரட்டும் தலைவர் பிரசான் கங்காரியா, “Music for a Cause” என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். இளைஞர்களை பெரிதும் கவரும் அனுவ் ஜெயினின் இசை, பெரும் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி மருத்துவ மற்றும் பரிசோதனை உபகரணங்களை மேம்படுத்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் அணுகல் திட்டங்களை விரிவுபடுத்த ஏழை மற்றும் தேவைப்படுவோருக்கு இலவச / சலுகை மருத்துவ சேவைகள் வழங்க பயன்படுத்தப்படும் என ஆர்.ஒய்.ஏ காஸ்மோ அறக் கட்டளை தலைவர் சதீஷ் முனோத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த மனீஷ் ரங்கா, சஞ்சய் குண்டேச்சா, அஜய் நஹார், சிராக் சௌதாரியா, மகேஷ் தலேடா, அனில் கோத்தாரி, அபய் லோடா உள்ளிட்ட குழுவினரும், டிரஸ்டிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்களும் கடந்த ஒரு மாதமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img