Homeபிற செய்திகள்சேலம் சோனா கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

சேலம் சோனா கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

சேலம் சோனா தொழில் நுட்பக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் மற்றும் கலை விழா, நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. ‘சோனா சேம்ப்ஸ் ’26’ என்ற பெயரில் நடைபெறும் இவ்விழாவுக்கான சுவரொட்டி வெளியீட்டு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடந்தது.
அறிவியல் கண்காட்சி, கவிதை, ஓவியம், வினாடி வினா, பேச்சு, பாடல், நடனம், வேடிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img