fbpx
Homeபிற செய்திகள்கோவை எல்சி மருத்துவமனை தலைவர் பி.எஸ்.ராஜனுக்கு ரோட்டரி சங்க விருது

கோவை எல்சி மருத்துவமனை தலைவர் பி.எஸ்.ராஜனுக்கு ரோட்டரி சங்க விருது

டாக்டர் பி.எஸ்.ராஜன், அறுவைசிகிச்சை துறை மற்றும் சமூக நலனுக்கான அவரது பங்களிப்பிற்காக கடந்த 20ம் தேதி ஐஎம்ஏ ஹாலில் கோயம்புத்தூர் மில்லினியத்தின் ரோட் டரி கிளப் மூலம் “தொழில்சார் சிறப்பு விருது – 2024” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ரோட்டரி சங்கத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் அங்கீகாரம் தொழில்சார் சிறப்பு விருது ஆகும். தேர்ந்தெடுக்கப்படும் நப ருடைய தொழில் மற்றும் சமூக பங்களிப்புகளை ஆய்வு செய்த பிறகு, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நபருக்கு மட்டும் வழங்கப்படும் இந்த அங்கீகாரம் ரோட்டரியின் உயர்ந்த விருதாகும்.

விழாவிற்கு ஐஎம்ஏ, மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி 3201 இயக்குனர் கோகுல்ராஜ், உதவி கவர்னர் ஸ்ரீராமுலு, ரமேஷ் CGR, அமுல்ராஜ் தொழில் சேவை இயக்குனர், யுவராஜ், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மில்லேனியம் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் டாக்டர் ராஜனுக்கு விருது வழங்கி பாராட்டினர். டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் பேசுகையில், காஸ்ட்ரோஎன்டராலஜி துறையில் டாக்டர் ராஜ னின் 30 ஆண்டுகால பயணம் மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு திட்டத்திற்கான அவரது புகழ் பெற்ற திட்ட மான ப்ராஜெக்ட் எஸ் மற்றும் ஆரம்பநிலை புற்றுநோ யின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியு றுத்தினார்.

கோவிட் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது டாக்டர் ராஜனின் மற்ற சமூக பங்களிப்புகள் பாராட்டப்பட்டன. வடுவற்ற அறுவை சிகிச்சை துறையில் அவர் செய்த சாதனைகளை ராம நாதன் குறிப்பிட்டார்.
எல்சி நிர்வாக இயக்கு நர் டாக்டர் வித்யா ராஜன், எல்சி மருத்துவக் குழுவினர், டாக்டர் கந்த சாமி, டாக்டர் கார்த்திக், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img