ஒரு வளர்ந்து வரும் முன்னணி சந்தை நிறுவனமான கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், கோத்ரேஜ் ஃபேப் இன் இந்த அறிமுகம் மூலம் இந்திய சலவை பராமரிப்பில் புதுமையை புகுத்தியுள்ளது.
இந்த தயாரிப்பு, சலவை அனுபவத்தை மறுவரையறை செய்கின்ற ஒரு உயர் செயல்திறன் கொண்ட திரவ டிடெர்ஜென்ட் ஆகும். தென்னிந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கோத்ரெஜ் ஃபேப் ஒரு லிட்டர் பாட்டிலுக்கு ரு.99 என்ற ஒரு கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்தியா தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அஷ்வின் மூர்த்தி இந்த அறிமுகம் குறித்து, கூறுகையில், “ குளிர்கால சிறப்பு நற்சான்றுகளுடன் வடக்கு மற்றும் கிழக்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்ற Ezee மூலம் திரவ டிடெர்ஜென்ட் பிரிவில் கோத்ரேஜ் ஒரு முன்னோடியாக உள்ளது.
வீட்டு பூச்சிக்கொல்லிகளிலிருந்து; கேச நிறமி முதல் சோப்புகள் வரை, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் எப்போதும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகைகளைக் கொண்டுள்ளது. கோத்ரெஜ் ஃபேப் மூலமாகவும், திரவ டிடெர்ஜென்ட் வகைகளில் எங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அதை அனைவருக்கும் அணுகக்கூடியதாக ஆக்குகிறோம், இதன் மூலம் தரமான சலவை பராமரிப்புக்கான அணுகலை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம்.”என்று கூறினார்.
இந்த திரவ டிடெர்ஜென்ட் வகை இந்தியாவின் FMCG துறையில் வேகமாக வளர்ந்து வரும் வகைகளில் ஒன்றாகும். திரவ டிடெர்ஜென்ட்களின் இந்த வளர்ச்சியானது ஒட்டுமொத்த நாடு தழுவிய விற்பனையில் பாதிக்கு அருகில் ஆதிக்கம் செலுத்தும் தெற்கு பிராந்தியத்தால் வழிநடத்தப்படுகிறது.