fbpx
Homeபிற செய்திகள்ரூட்ஸ் குழும பணியாளர்கள் ரூ.1.12 லட்சம் கொடி நாள் நிதி

ரூட்ஸ் குழும பணியாளர்கள் ரூ.1.12 லட்சம் கொடி நாள் நிதி

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து கொடி நாள் நிதி வழங்கினர்.

கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, மனிதவன மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் கவிதாசன் ஆகியோர் ரூட்ஸ் குரூப் பணியாளர்களின் சார்பாக கொடி நாள் நிதியாக ரூ.1,12,700/-யை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினர்.

இனி வருகின்ற ஒவ்வொரு வருடமும் கொடி நாள் நிதிக்கு அனைத்துப் பணியாளர்களும் தங்களது பங்களிப்பை செலுத்துவோம் என பணியாளர்கள் சார் பில் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நிறுவனப் பணியாளர்கள் சார்பாக எம். சரவணன், கே.எஸ்.ஸ்ரீதர் ராவ், கே.மணிகண்டன், ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img