fbpx
Homeபிற செய்திகள்ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம்

ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம்

ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பெண்களின் சட்ட பிரச்சினைகள் தொடர்பாக இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம் மற்றும் அரசு பெண் களுக்கு வழங்கும் சலுகைகளை எவ்வாறு பெறுவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கோவையில் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதோடு மட்டும் இன்றி, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சி னைகளுக்கு தீர்வு காண விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கோவை லட்சுமி மில் ஜங்கசன் பகுதியில், ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார் தலைமையில், சமுதாயத்தில் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.

இதில், அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெறுவது தொடர்பாகவும், பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள், குடும்ப ரீதியிலான பிரச்சினைகள், அவர்க ளின் பாதுகாப்பு தொடர்பாகவும் விளக்கி கூறப் பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழக்கறிஞர்கள் வழங்கினர்.
கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தேன்மொழி, அமுதா, ரேணுகாதேவி, ரோகிணி ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img