நாமக்கல்லில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவல கங்கள் (வடக்கு, தெற்கு) மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை(கலால்) சார்பில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதனை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இ.எஸ்.முருகேசன் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.
பேருந்து நிலைய பயணிகளிடம் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டிய நாட கம், கரகாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், பேருந்தில் கவனக்குறைவால் ஏற்படும் விபத் துக்கள், வளைவு பகுதி யில் ஏற்படும் விபத்துக்கள், பஸ் படிக்கட்டில் தொங்கிச் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்கள், அதிகளவு உயரத்தில் பாரம் ஏற்றிச் சென்றால் ஏற்படும் விபத்துக்கள், மோட்டார் சைக்கிளில் அதிக நபர்கள் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள், ஹெல்மெட் அணிவதின் அவசியம், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தி செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் விபத்து தடுப்பு குறித்து மக்களிடையே துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.



