யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் பவள விழா ஆண்டில் இருபத்தெட்டாவது நிகழ்வாக ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து பர்கூர் மலைப் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு மலைப் பயண முகாம் மற்றும் சர்வதேச மலைகள் தின விழா ஜனவரி 3 ந் தேதி புதன்கிழமை கல்லூரி என்சிசி மேஜர் டாக்டர். கவிதா தலைமையிலும் யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது.
பர்கூர் வனச்சரகர் பிரகாஷ் மலைப்பயணத்தை துவக்கி வைத்தார். வனக் காவலர் சீனிவாசன், தாமரைக்கரை வனவர் சுப்ரமணியன் மற்றும் 85 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமை கொங்கு கிளை தலைவர் சந்திரா தங்கவேல், கவிதா ஏற்பாடு செய்தனர்.