கோவை தலைமை அஞ்சலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது . முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பழு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திலக் சரண், டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற சரத் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.