fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழா

பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழா

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் மண்டல அலுவலகம் பல்வேறு பிரிவுகளுக் கான சேவைத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நமதுநாட்டின், தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி செயல்பாட்டில் தீவிர பங்கெடுத்து வருகிறது, பேங்க்ஆப் இந்தியா பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த 75 வது குடியரசு தினவிழாவில் மண்டல மேலாளரும் துணைப்பொது மேலாளருமான அஜெயா தாக்கூர் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்க ளுக்கும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நாட்டில் சமத்துவம், சமஉரிமை, ஒற்றுமை நிலைத்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.
75வது குடியரசு தினத்தையொட்டி பிரதான் மந்திரி திட்டங்களின் கீழ் வங்கிவிதிகளுக்கு இணங்க கடன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த மண்டல மேலாளர் அஜெயா தாக்கூர், பாங்க் ஆப் இந்தியாவின் பல்வேறு சேவைத் திட்டங்களையும் எடுத்துரைத்தார். விழாவில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான திட்டங்கள் , அதாவது, வெல்கம் ஆஃபர், டாக்டர் பிளஸ், அசெட் பேக்ட் லோன் போன்றவற்றிலும் தனிநபர் கடன்கள் அதாவது வீட்டுக் கடன், வாகனக்கடன் சொத்துக் கடன் போன்றவற்றிலும், நிதிச் சேமிப்புதிட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றிலும் 5135 உள்நாட்டு கிளைகளைக் கொண்டுள்ள பேங்க் ஆப் இந்தியா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img