fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 77வது குடியரசு தினவிழா ஆணையாளர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து மாநகராட்சி பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் சிறப்புரை ஆற்றுகையில், மாநகராட்சியின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். மேலும், மாநகராட்சியில், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றி தழை வழங்கினார்.
விழாவில் துணை ஆணையர் சரவணகுமார் வரவேற்புரை வழங்கினார். மூத்த கவுன்சிலர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

நகர் நல அலுவலர் சரோஜா, நகர பொறியாளர் தமிழ்செல்வன், உதவி ஆணையர்கள் வேலாயுதம், முனீர் அகம்மது, காந்திமதி, சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், ராஜசேகரன், ராஜபாண்டி, மண்டல தலைவர்கள் தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டூர் ராஜா, பால குருசாமி, நிர்மல் ராஜ், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img