கோவையில் எஸ்.எஸ்.எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார் பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விளை யாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக மத நல்லிணக்க கிரிக்கெட் போட்டி கரும்புகடை சேரன் நகர் பகுதி யில் நடைபெற்றது.
நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் தலைமையில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் இளைஞர் களிடையே நல்ல பண்புகள் வளர விளையாட்டில் ஆர் வம் கொள்ள வேண்டும். நல்வழியில் இளைஞர்கள் பயணித்து அனைவரும் மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.