தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில் அரசு பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் தேசிய டிராக் சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாபிதா 14 வயது பிரிவு தனிநபர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். 16 வயதிற்கு உட்பட்ட குழு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இதன்பின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தேசிய அளவிலான ரோடு சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்தது இதில் 14 வயது டைம் டிரையல் தனி நபர் போட்டியில் மாணவி தாபிதா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
வெற்றிபெற்ற மாணவியை,பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி விளையாட்டு ஆசிரியர் ராஜப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.