fbpx
Homeபிற செய்திகள்114 வது பிறந்த தினத்தையொட்டி டாக்டர் மு.வரதராசனார் திருவுருவப் படத்திற்கு இராணிப்பேட்டை ஆட்சியர் மலர் தூவி...

114 வது பிறந்த தினத்தையொட்டி டாக்டர் மு.வரதராசனார் திருவுருவப் படத்திற்கு இராணிப்பேட்டை ஆட்சியர் மலர் தூவி மரியாதை

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களில் ஒருவரான தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாருக்கு அவர் பிறந்த ஊரான இராணிப்பேட்டை வாரச் சந்தை மைதானத்தில் குவிமாடத்துடன் கூடிய முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் மூலம் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரின் 114 வது பிறந்த தினைத்தையொட்டி இராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அன் னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், இராணிப்பேட்டை நகரமன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் குடும்ப உறவினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img