வேட்டி வாரத்தை முன்னிட்டு ராமராஜ் நிறுவனம் சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 500 ரூபாய்க்கு மூன்று வேட்டிகள் என்ற காம்போ பேக்கை ராமராஜ் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தி வைத்தார்
தமிழகம் முழுவதும் வேட்டி அணிவதை ஊக்குவிக்கும் வகையில் வேட்டி வாரம் ஜனவரி 1ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது . இதனை ஊக்குவிக்கும் வகையிலும் இளைஞர்கள் மத்தியிலும் வேட்டி அணிவதை பிரபலப்படுத்தும் வகையில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் வெவ்வேறு புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வேட்டி வாரத்தை ஊக்குவிக்கும் வகையில் 500 ரூபாய்க்கு 3 வேட்டிகள் என்ற காம்போ பேக்கை ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நம் முடைய கலாச்சார உடையான வேட்டியை அனைவரும் அணிந்து நம்முடைய கலாச்சாரத்தை காப்பது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களுடைய குடும்பத்திற்கு ஒரு வாழ் வாதாரத்தையும் அளிப்பது நமது அனைவருடைய கடமை. நமது தமிழருடைய அடையாளம் வேட்டி.
வெஸ்டர்ன் கல்ச்சர் உடை
இதை முதலமைச்சர் முதல் பாரத பிரதமர் வரை கட்டி நமக்கெல்லாம் மிகப்பெரிய அளவிற்கு ஒரு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள். இன்று வெஸ்டர்ன் கல்ச்சர் உடைய தாக்கத்தினால் நம்முடைய வேட்டி கலாச் சாரம் அழிந்து வருவதை தடுத்து மீண்டும் நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்று நல்ல நோக்கத்திற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் அறிவித்த வேட்டி தினத்தை ஒரு நாள் கொண்டாடுவதை விட ஒரு வாரம் கொண்டாடுவதாக வேட் டிவாரக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தி கடந்த 7,8 ஆண்டுகளாக ராமராஜ் காட்டன் இந்த வேட்டி வார கொண்டாட்டத்தை சிறப்பாக செய்து வருகிறது.
இதில் வேட்டி கட்டாதவர்கள் கூட இந்த காம்போ பேக்கை வாங்கி வேட்டியை கட்டுவதற்கு ஏதுவாகவும் நெசவாளருடைய வாழ்வாதாரமும் அதிகப்படுத்துவதற்கு பலப்படுத்துவதற்காகவும் 500 ருபாய் காம்போ பேக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
இந்த வேட்டி வார கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் ஆகிய நாம் அனைவரும் கலந்து கொண்டு வேட்டியை அணிந்து நமது அடையாளம் ஆக்கி நம்முடைய மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.



