போப் 16ம் பெனடிக்ட் மறைவுக்கு ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:
மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சபையின் வளர்ச்சியிலும், திருச்சபையின் விசுவாசிகளுக்கு இறையியல் விழிப்புணர்வை வழங்குவதிலும், திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதிலும் மிகவும் முக்கிய பங்கு வகித்த ஒரு சிறந்த இறையியலாளர் ஆவார்.
மனதாலும், உடலாலும் தன்னால் சபைக்கு தலைமை தாங்க முடியாது என்ற நிலையில் தன் பதவியை தியாகம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்.
அதனால் அவரது பதவி காலத்தில் எட்டு வருட அப்போஸ்தலிக்க ஊழியத் திற்குப் பிறகு, அவர் தனது ஓய்வு வாழ்க்கையைப் படிப்பதிலும், ஜெபிப்பதி லும், நல்ல மரணத்திற்கு ஆயத்தப்படுத்துவதிலும் இறங்கினார்.
கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம்
கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம் அவர் போப் பாண்டவராக உள்ள 2010ல் தான் உருவானது. அந்த அளவுக்கு பெனடிக் 16 போப் ஆண்டவரோடு நமக்கு ஈடுபாடும் நன்றியும் அன்பும் உள்ளது. அவரது உடல் தகனம் வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) காலையில் என்று தீர்மானிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனைவரும் நமது ராமநாத மறைமாவட்டத்தின் அனைத்து தேவாலயங்கள், இல்லங்கள், நிறு வனங்களில் ஜனவரி 5 ஆம் தேதி வரை கொண்டாட்டங்களைத் தவிர்த்து துக்கம் அனு சரிக்க வேண்டும்.
மேலும் இந்த நாட்களில் போப்பாண்டவர் பெனடிக் பதினாறாம் திருத்தந்தையின் திருஉருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்துங்கள். இளைப்பாறுதல், நற்க ருணை பிரார்த்தனை, இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் மூலம் பிரார்த்தனை செய்யுங்கள்.
ராமநாதபுரம் மறை மாவட்டத்தின் சார்பில் வருகின்ற 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மதியம் 3.30 மணிக்கு போப்பாண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடை பெறும்.
இதில் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அருட் தந்தையரும், கன்னியஸ் தரும், மத போதகரும், சந்தியாசிகளும், பங்கின் பல்வேறு அமைப்பின் தலைவர்களும், அறங்காவலர்களும், சமூக அமைப்பாளர்களும் பங்கு பெறு கின்றனர். அனைவருக்கும் புத்தாண்டுஆசிகளும் நல்வாழ்த்துக்களும்.