கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நரசிம்ம நாயக்கன் பாளையம் நகர கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் குமார், வட்டார தலைவர் மோகன் ராஜ், முன்னாள் நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.வி மணி, மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் கோவை போஸ், தமிழ்செல்வன், காந்தகுமார் மற்றும் கோவிந்தராஜ், சண்முக சுந்தரம், சுப்பிரமணியம், ராமசாமி, வெள்ளிங்கிரி, சிவமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், செல்வராஜ், பாலசுப்பிரமணியம், தம்பி பார்த்திபன் ஜனார்த்தன்நாயடு ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள்.



